43. அதிபத்த நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 43
இறைவன்: காயரோகணேஸ்வரர்
இறைவி : நீலாயதாட்சியம்மை
தலமரம் : மா
தீர்த்தம் : புண்டரிக தீர்த்தம்
குலம் : நுளையர்
அவதாரத் தலம் : நம்பியார் நகர்
முக்தி தலம் : நம்பியார் நகர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) :ஆவணி - ஆயில்யம்
வரலாறு : செம்படவர் குலத்தில் அவதாரம் செய்தவர். கடலில் தான் பிடிக்கும் முதல் மீனை இறைவனுக்கு என்று கடலிலேயே விட்டு விடுவார். சில நாட்களில் ஒரு மீனே கிடைக்கும் அப்போதும் அதனை விட்டு விடுவார். என்வே வறுமையில் வாடினார். இருந்தபோதும் தம் பணியில் மாறுபடவில்லை. ஒருநாள் ஒரு தங்க மீன் மட்டும் கிடைத்தது. அதனையும் கடலிலேயே விட்டார். அவரது பக்தியை மெச்சி இறைவன் காட்சி கொடுத்தார்.
முகவரி : அருள்மிகு.காயரோகணேஸ்வரர் திருக்கோயில், நம்பியார் நகர் – 611001, நாகை
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. லோகநாதன்
அதியபத்தர் திருக்கோயில்
அலைபேசி : 9843603733

இருப்பிட வரைபடம்


வாகு சேர்வலை நாள்ஒன்றில் மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கெனவிடும் இயல்பால்
ஆகு நாள்களில் அனேகநாள் அடுத்தொரு மீனே 
மேக நீர்படி வேலையில் படவிட்டு வந்தார்.
- பெ.பு. 4008
பாடல் கேளுங்கள்
 வாகு சேர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க